Heavy Rain Alert : 4 மாவட்டங்களில் கனமழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் இம்மாத இறுதியுடன் தென்மேற்கு பருவமழை முடிவடையுள்ள நிலையில் வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்து தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக கடந்த 5ஆம் தேதியன்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என கூறப்பட்டது.
அதன்படி காற்றின் திசை மாறுபாடு ஏற்பாடு பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தகவல் வெளியாகியுளளது.
இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்றும் குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தகவல் தெரிவித்துள்ள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கான அறிவிப்பின்படி, மேற்கண்ட 4 மாவட்டங்களை தவிர்த்து சென்னையில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், மற்ற மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025