#Helicopter Crash: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!

Published by
murugan

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது மோசமான வானிலை(மேகமூட்டம்) காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், அதில் பயணம் செய்தவர்களின் முழுமையான விபரம் தெரிவிக்கப்படவில்லை.

இன்று காலை 11:47 க்கு சூலூரில் இருந்து புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்  பகல் 12.20 மணிக்கு விபத்துக்குள்ளானது. தரையிறங்க வேண்டிய வெலிங்டனில் இருந்து 10 கிலோ மீட்டருக்கும் முன்புதான் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. தரையிறங்கி 5 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விழுந்த உடனே அருகில் செல்ல முடியாத அளவுக்கு தீப்பற்றி விமானம் எரிந்தது. விமானம் பெட்ரோல் காரணமாக தொடர்ந்து தீ எரிந்து கொண்டே உள்ளது.  இந்நிலையில், இந்த விபத்தில் 10 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். பிபின் ராவத் நிலைமை என்ன என்பது தான் தற்பபோதைய பெரும் கேள்வியாக உள்ளது.

இதுவரை இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சம்பவ இடத்திற்கு செல்கிறார். ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்டவர்கள் கடுமையான தீக்காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

Recent Posts

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

3 minutes ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

52 minutes ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

1 hour ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

2 hours ago

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்றம் உத்தரவை…

3 hours ago

5-வது டெஸ்ட் போட்டி.., டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி…

3 hours ago