தெலங்கானாவில் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி மகிமா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.
தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் தனியார் விமான பயிற்சி நிலையம் உள்ளது. இந்நிலையில், இன்று மதியம் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி மகிமா மற்றும் விமானி ஒருவர் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்து எரிந்து சாம்பலானது.
ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்து கருகிவிட்டனர். இந்த விபத்தை அந்த பகுதியில் வயல் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் நேரில் பார்த்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வாக பறந்த காரணத்தால் மின்சார கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…