நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில், பேராசிரியர்கள் கல்லூரிக்கு வர உயர்கல்வித்துறை உத்தரவு.
நாளை முதல் அனைத்து வகை கல்லுாரிகளின் பேராசிரியர்களும், பணியாளர்களும் அனைத்து வேலை நாட்களிலும், நேரடியாக கல்லுாரிக்கு வர வேண்டும் என்றும் அவர்களுக்கான வருகைப் பதிவை பராமரிக்க வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் ஆணையிட்டுள்ளார். கல்லூரியில் இருந்தபடி ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும். கல்லூரிகள், பல்கலைகழகங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பெரும்பாலான கல்லுாரிகளில், ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் துவக்கப்பட்ட நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு தவிர்த்து, மற்ற மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நாளை துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…