சென்னையில் 4 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

School Reopen

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் கடந்த 4-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்தன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கி நின்ற மழை வெள்ளம் தற்போது வடிந்து வருவதால் ஒரு வார விடுமுறைக்கு பிறகு இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள  பள்ளி-கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டது.

இந்நிலையில், பூவிருந்தவல்லி மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி, அறிஞர் அண்ணா ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, சரோஜினி வரதப்பன் மேல்நிலைப்பள்ளி  மற்றும் சின்ன போரூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 4 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் வடிந்த நிலையில் தூய்மை பணியின் நடைபெறுவதால் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கவந்த அரையாண்டு பொதுத் தேர்வு மிக்ஜாம் புயலால் முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை முதல் அரையாண்டு பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று நான்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்