#Holiday : நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை..!

Default Image

தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. 

தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என்று தெரிவித்துள்ளது.

நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்