வீட்டு வாடகை கேட்டு உரிமையாளர்கள் அழுத்தம் கொடுக்க கூடாது.!

Default Image

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டு செல்கிறது. அதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை உள்ளது.இதனால் பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவது போன்றவை கடைபிடிக்க வேண்டும் என அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் கூறப்பட்டு உள்ளது.
ஆனால் அதை பலர் கடைப்பிக்காததால் சென்னை மாநகராட்சி சார்பில் மாஸ்க் அணியாமல் வெளியே நடந்து சென்றால் ரூ.100 அபராதம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது , அப்போது பலர் எந்த வித மாஸ்க் அணியவேண்டும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பொதுமக்கள் எந்தவித மாஸ்க் வேண்டும் மென்றாலும் அணிந்து கொள்ளலாம்.கொரோனா பரவாமல் இருக்க சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவது கட்டாயம். முடிந்தால் வீட்டிலேயே துணியால் மாஸ்க் தயாரித்து பலமுறை உபயோகிக்கலாம் என்றும் கைக்குட்டை, துப்பட்டாவையும் மாஸ்க் போல பயன்படுத்தலாம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்காத  150 கடைகளுக்கு சீல் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். வீட்டு வாடகை கேட்டு உரிமையாளர்கள் அழுத்தம் தரக்கூடாது என்றும் தெரிவித்தார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்