சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் தந்தையை நேரில் சென்று கெளரவித்த அமைச்சர் பொன்முடி.!

நிலவின் தென் துருவத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலமானது நேற்று முன்தினம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் உலகில் முதல் நாடாக இந்தியா கால்பதித்துள்ளது. இதற்கு உலக நாட்டு, தலைவர்கள் முதல் பலர் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.
இந்த சந்திராயன்-3 திட்டத்திற்கு திட்ட இயக்குனராக செயல்பட்ட வீரமுத்துவேல் தமிழகத்தை சேர்ந்தவர். சந்திராயன் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தனது வாழ்த்துக்களை இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் அவர்களுக்கு தெரிவித்தார்.
தற்போது, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி , வீரமுத்துவேல் அவர்களின் சொந்த ஊரான விழுப்புரம் சென்று , அவரது தந்தை SRMU பழனிவேல் அவர்களை நேரில் சந்தித்து , சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி தனது மரியாதையை செலுத்தினார். உடன் அமைச்சர் பொன்முடி அவர்களின் மனைவி மற்றும் திமுக கட்சியினர் இருந்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025