வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலின் தேதியை அறிவித்ததை தொடர்ந்து, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால், கூட்டணியை பலப்படுத்த அதிமுக, திமுக போன்ற முன்னணி கட்சிகள் அதற்கான வேளையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது.
அதன்படி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமாவிற்கு 23 தொகுதிகளை ஒதிக்கீடு செய்வதாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் தேமுதிக தலைவர் விஜகாந்த்தை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தாக கூறப்படுகிறது. விரைவில் தொகுத்து பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்தபடியாக தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்டு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் பாஜகவுக்கு ஒதுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.
இன்று புதுச்சேரி, தமிழகத்தில் அமித்ஷா பொது கூட்டம் மற்றும் பேரணியில் கலந்து கொள்ளவுள்ளார். இதனிடையே, நேற்று காலை முதல்வர், துணை முதல்வரை சந்தித்த குழு, இன்று அமித்ஷாவுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளது. சென்னையில் அமித்ஷாவுடன் முருகன், கிஷன் ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…