நேற்று தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்திய இடத்தில் பொக்லைன் இயந்திரம்கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். அப்போது, நிலம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன் வாக்குவாதம் செய்தார்.
இதனால், காட்டுமன்னார்கோவில் போலீசார் இளங்கீரனை கைது செய்தனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், திருச்சி – சிதம்பரம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வீராநந்தபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளிடம் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரனை அடித்து – இழுத்துச் சென்று அராஜகமாகக் கைது செய்துள்ள அ.தி.மு.க. ஆட்சிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“விவசாயி” என்று வேடம் போட்டு, நகர்வலம் வந்து கொண்டே – தனக்குக் கீழ் உள்ள காவல்துறையை விட்டு விவசாய சங்கத் தலைவரை அராஜகமாகக் கைது செய்திருக்கும் பழனிசாமி – மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துள்ளார். “மனிதாபிமானம் கிலோ என்ன விலை” என்று விவசாயிகளிடம் கேட்கும் பழனிசாமி, ‘என்னை வந்து பார்த்து விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு நன்றி தெரிவித்தார்’ என்பதை உள்நோக்கமாக வைத்து – இளங்கீரன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் போட்டு மனித நேயமற்ற முறையில் கைது செய்திருப்பது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை! விவசாயிக்கு ஒரு கையில் “கடன் தள்ளுபடி அறிவிப்பு” இன்னொரு கையில் கடுமையாகத் தாக்கி “கைவிலங்கு” போடுவது – என்ற முதலமைச்சர் பழனிசாமியின் வேடம் இதோ கலைந்து விட்டது!
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…