#TNBudget2021: தமிழ்நாடு பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் முக்கிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு.

தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று  நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பல திட்டங்கள் குறித்த தகவல்கள் பட்ஜெட் உரையில் இடம்பிடித்திருந்தது.

அதன்படி, தமிழ்நாடு பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு: 

  • தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு.
  • சீர்முக்கு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு.
  • சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4807 கோடி ஒதுக்கீடு.
  • மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு 959.20 கோடி ஒதுக்கீடு.
  • தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உறுதி செய்ய ரூ.20 ஆயிரம் கோடி.
  • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
  • மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலன் மேம்பாட்டுக்கு ரூ.1149.79 கோடி ஒதுக்கீடு.
  • தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த மொத்தம் ரூ.6607.17 கோடி ஒதுக்கீடு.
  • தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடியும், தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடியும் ஒதுக்கீடு.
  • முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு 959.20 கோடி ஒதுக்கீடு.
  • புரட்சி தலைவர் எம்ஜிஆர் மதிய உணவுத் திட்டத்திற்கு ரூ.1,725.41 கோடி ஒதுக்கீடு.
  • காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.1,360 கோடி ஒதுக்கீடு.
  • தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.13 கோடி ஒதுக்கீடு.
  • விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி செல்ல சாலை பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
  • கொரோனா நிவாரண தொகுப்பு ரூ.9,370.11 கோடி ஒதுக்கீடு.
  • கலைஞர் பெயரில் நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
  • உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 25 கலை கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு 10 கோடி ஒதுக்கீடு.
  • பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சுற்றுலா துறைக்கு 187.59கோடி ஒதுக்கீடு. 300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.
  • ஜல் ஜீவன் இயக்கம் மூலம் கிராமப்புறங்களில் 1.27 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
  • நீதித்துறைக்கு ரூ.1,713 கோடி நிதி ஒதுக்கீடு.
  • மத்திய அரசின் தூய்மை பாரத இந்தியா திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.
  • நெடுஞ்சாலைகள் துறைக்கு ரூ.17,899.17 கோடி ஒதுக்கீடு.
  • 2021 – 22 ஆம் ஆண்டிற்குள் 200 குளங்களை தரம் உயர்த்த ரூ.111.24 கோடி ஒதுக்கீடு.
  • 1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி நிதி ஒதுக்கீடு.
  • மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.1046.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • விவசாயத்திற்கான இலவச மின்சாரம், மானியம் மற்றும் மின் துறை இழப்புகளுக்காக ரூ.9,872.77 கோடி ஒதுக்கீடு.
  • வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்வு.
  • தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்க ரூ.433 கோடி ஒதுக்கீடு.
  • கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்.
  • பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைப்பு.
  • ஒருங்கிணைந்த குழைந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.2,356 கோடி ஒதுக்கீடு.
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கான ரூ.225.62 நிதி ஒதுக்கீடு.
  • கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் ஏழைகளுக்கான இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு ரூ.490 கோடி ஒதுக்கீடு.
  • திருநங்கைகள் பயன்பெறும் வகையில் ஓய்வூதிய திட்டத்திற்காக ரூ.1.50 கோடி ஒதுக்கீடு.
  • இந்த ஆண்டு 100 திருக்கோவில்களில், நந்தவனம் ஆகியவற்றை சீரமைக்க 100 கோடி ஒதுக்கீடு.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வரலாற்று சாதனையை தவறவிட்ட முல்டர்…செம டென்ஷனான கிறிஸ் கெயில்!

வரலாற்று சாதனையை தவறவிட்ட முல்டர்…செம டென்ஷனான கிறிஸ் கெயில்!

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…

5 hours ago

பால் வேண்டும், மோர் வேண்டும் ஆனா… “கால்நடை மனநிலை” பற்றி சீமான் பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…

6 hours ago

ரொம்ப பேசுது அபராதம் போடணும்! Grok மீது போலாந்து அமைச்சர் புகார்!

வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…

6 hours ago

INDvsENG : “ஆரம்பே அமர்க்களம்”..இங்கிலாந்தை திணற வைத்த நிதிஷ் குமார் ரெட்டி!

லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…

7 hours ago

அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…

8 hours ago

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

9 hours ago