சென்னையில் தன்னுடைய 2-வது மனைவி மீது சந்தேகமடைந்து கொலை செய்துள்ளார்.
சென்னையை சேர்ந்தவர் ராஜ்குமார் இவருக்கும் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரமணி என்பவருக்கும் திருமணம் முடிந்தது ராஜ் குமார் ரமணியை இரண்டாவதாக திருமணம் செய்தார், மேலும் ராஜ்குமார் வாட்ச்மேன் ஆக பணியாற்றி வருகிறார், இந்நிலையில் ரமணி சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்று பார்த்ததும் இரட்டை குழந்தை வளர்வதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள், மேலும் திடீர் என்று ரமணி தனது கருவை கலைத்தார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பித்திருந்த ஊரடங்கு காரணமாக ராஜ் குமார் வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார், இந்த நிலையில் ராஜ்குமார் தனது மனைவி ரமணியை சந்தகே பட்டு எப்பொழுதும் சண்டை போடுவதாக தெரிகிறது, வீட்டில் இருந்தால்தான் சண்டை வருகிறது என்று ரமணி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் இதனால் ராஜ் குமார் தனது வீட்டிலே தனியாக வசித்து வந்தார், சிறிது நாட்கள் கழித்து மனைவி ரமணியை அழைத்துள்ளார் ஆனால் அவர் வரவில்லை இதனால் கோபமடைந்த ராஜ் குமார் ரமணியை கொலை செய்யதிட்டமிட்டு மார்க்கெட் சென்று அருவாள் ஒன்று வாங்கியுள்ளார்.
அதன் பிறகு தனது மனைவியை சமரசம் செய்து தனது வீட்டிற்கு அழைத்து வந்தார், வீட்டிற்கு வந்து சிறிது நேரம் பேசியுள்ளார்கள், மீண்டும் இருவருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த ராஜ் குமார் வீட்டில் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து ரமணியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர், மேலும் காவல்துறையினர் ராஜ் குமார் ர் தனது மனைவி ரமணியை வெட்டிய காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது, இதனால் காவல்துறையினர் சுலபமாக குற்றவாளி அவர்தான் என்று கண்டுபிடித்தனர், மேலும் ராஜ் குமாரை கைது செய்தனர்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…