காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த கூனன்ப்பட்டறையை சேர்ந்தவர் காஞ்சனா-யோகேஸ்வரன் தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்னர் யோகேஸ்வரன், காஞ்சனாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்சப்பில் பரப்பியதாக தெரிகிறது. இதனையடுத்து, செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் காஞ்சனா அளித்த புகாரின் பெயரில், யோகேஸ்வரனை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து, தற்போது காஞ்சனா பெயரில், முகநூலில் போலி கணக்கு தொடங்கி அதில் காஞ்சனாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அலைபேசி என்னுடன் வெளியிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினர் சிலரின் புகைப்படடகியும் அவர் தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார்.
இவர் பதிவிட காஞ்சனாவின் தொலைபேசி என்னை தொடர்பு கொண்டு பலரும் தனக்கு மனா உளைச்சலை அளித்துள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து காஞ்சனாவின் உறவினர்கள், செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில், யோகேஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…