நெல்லை மாவட்டம் பணகுடி சேர்ந்த கார்த்திகேயன் (49) இவர் கப்பலில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி(40) இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது.
ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை. பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சைகள் செய்தும் குழந்தை பிறக்காததால் கார்த்திகேயன் மன அழுத்தத்தில் இருந்தார். இதனால் ஐந்து வருடங்களுக்கு முன் கப்பலில் செய்து கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு வீட்டில் வந்து இருந்து விட்டார்.
இதன் காரணமாக கணவர் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக கார்த்திகேயன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 31-ம் தேதி இரண்டு பேருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.
குழந்தை இல்லாத வருத்தத்தில் இருந்து தனலட்சுமி கணவர் அடிக்கடி தகராறு செய்ததால் மனமுடைந்த அவர் தென்னை மரத்திற்கு அடிக்க வைத்து இருந்த பூச்சி மருந்து எடுத்துக் குடித்து விட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் மனைவி கையில் வைத்திருந்த மருந்து பாட்டிலை பிடிங்கி குடித்து விட்டார்.
சிறிது நேரத்தில் இரண்டு பேரும் வீட்டில் மயங்கி விழுந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பணகுடி போலீசார் இருவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…