முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின் அதிமுகவின் ஒற்றுமைக்கு,தானே காரணம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் முறைகேடாக டெண்டர்களை ஒதுக்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் ஆர்.எஸ். பாரதியும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் வெங்கடேசும் வழக்கு தொடர்ந்தனர்.
இதனால்,முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.அவ்வாறு நடைபெற்ற சோதனையில் ரூ13 லட்சம் ரொக்கப்பணம், ஹார்ட் டிஸ்க்குகள்,முக்கிய ஆவணங்கள் மேலும் ளையும் கைப்பற்றியதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து,அவரது வங்கி கணக்கு மற்றும் லாக்கர்கள் முடக்கப்பட்டது. இதற்கிடையில்,சென்னை எம்.எல்.ஏ.விடுதியில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் வேலுமணியிடமும் பல மணிநேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில்,சென்னையில் இருந்து கோவை சென்ற முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி ,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின் அதிமுகவின் ஒற்றுமைக்கு,தானே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“என்னைப் பொறுத்தவரை நான் அனைத்து மதத்தையும் மதிப்பவன்.கடவுளை நம்புகிறேன்.30 வருடங்களாக நான் சபரிமலைக்கு சென்று வருகிறேன்.ஆகவே,முழுமையாக இன்றைக்கு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது,நாங்கள் நீதியரசர்களை நம்புகிறோம்.லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.13 லட்சம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது உண்மையில்லை.மாறாக,முழுமையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது.இதனை நீதிமன்றத்திலே சந்திப்போம்.
அம்மா மறைவுக்கு பின் அதிமுக கழகம் ஒற்றுமையாக இருக்க,ஆட்சி தொடர உறுதுணையாக இருக்க நான் முக்கிய காரணம்.இதனால்தான் திமுக தலைவருக்கு என்மேல் கோபம்”,என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…