கவச உடை அணிந்து பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு தலைவணங்குகிறேன் – அமைச்சர் விஜயபாஸ்கர்

கவச உடை அணிந்து பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு தலைவணங்குகிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.இதன் பின் மருத்துவர்கள் அணியும் கவச உடை அணிந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மருத்துவர்கள் கவச உடை அணிவதன் சிரமத்தை இன்று நான் உணர்ந்துகொண்டேன். அதனை அணிந்து பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு தலைவணங்குகிறேன்.
நோய் தொற்றின் வேகத்தை ஓரிரு நாட்களில் கணிக்க முடியாது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி சோதனை முயற்சியை துவங்கியிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!
July 1, 2025
போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
July 1, 2025