திருமணம் வேண்டாம் என கூறிய பெண்ணை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்த பெற்றோரால், தற்கொலை செய்துகொண்ட பெண்.
தூத்துக்குடியை சேர்ந்த சுடலையாண்டி என்பவருக்கும் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுடலையாண்டி இளையமகள் விஜயலட்சுமிக்கு வருகின்ற 10ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. நேற்று அதிகாலை வழக்கம்போல் சுடலையாண்டி அவரது மனைவி இருவரும் அவர்களது டீக்கடைக்கு சென்று விட்டனர்.
இதனை அடுத்து, சுடலையாண்டி மூத்த மகள் எழுந்து சமையலறைக்கு வந்துள்ளார். அப்போது அவரது தங்கையான விஜயலட்சுமி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இதனை பார்த்த அவர் அதிர்ச்சியில் அலறல் சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வர, இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோரும் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் விஜயலட்சுமி தனது குடும்பத்தாரிடம், தனக்கு காது சரிவரக் கேட்காது. இந்த பிரச்சினை இருப்பதால், எனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்ததாகவும், இதனால் விஜயலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…