டிடிவி தினகரனிடம் கையெழுத்து வாங்க வேண்டுமானல் சிங்கப்பூருக்குதான் செல்ல வேண்டும் என்று கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், டிடிவி தினரகனுக்கு ஆதவராக தேர்தல் பரப்புரை செய்யும் அக்கட்சியின் தென்மண்டல அமைப்பாளர் மாணிக்கராஜா, எனக்கு சிங்கப்பூர், மலேசியாவில் ஹோட்டல்கள் இருப்பதாக மக்களிடம் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்.
எனது சொத்து மதிப்பு குறித்த விவரங்களை வேட்புமனுவில் வெளிப்படையாக தெரிவித்துள்ளேன். எனவே மாணிக்கராஜா தான் கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்வேன் என கூறி, சிங்கப்பூர் இதுவரை சென்றது இல்லை, மலேசியாவில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அரசு சார்பில் கலந்து கொண்டேன் என கூறியுள்ளார்.
மாணிக்கராஜா கூறும் இருநாடுகளில் எனக்கு பெட்டிக்கடை கூட கிடையாது. அப்படி இருப்பதை நிரூபித்தால், நாளைக்கே தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள தயார் என்று சவால் விடுத்துள்ளார். சிங்கப்பூரில் குடியுரிமை பெறுவது தொடர்பாக டிடிவி தினகரன் மீது வழக்கு உள்ளது.
இங்கேயே குடியிருக்க மாட்டேன் சிங்கப்பூர் செல்கிறேன் என்று கூறியவரை கோவில்பட்டியில் போட்டியிட வைத்திருக்கிறார். ஒருவேளை வெற்றி பெற்றால் ஏதாவது கையெழுத்து வாங்க வேண்டுமானல் சிங்கப்பூருக்குதான் செல்ல வேண்டும் என்றும் தேர்தல் களம் என்றால் எதையும் சந்திக்க அதிமுக தயராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…