PM Modi - DMDK Leader Vijayakanth [File Image]
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த வருடம் இறுதியில் டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட லட்சக்கணக்கான பொதுமக்களும் தங்கள் அஞ்சலியை நேரிலும் சமூக வலைதள வாயிலாகவும் செலுத்தினர். டிசம்பர் 29ஆம் தேதி விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் 9 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடிக்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள்.! – எல்.முருகன்
விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளம் வாயிலாக தனது இரங்கலை தெரிவித்து இருந்தார். தற்போது மீண்டும் விஜயகாந்திற்கு இரங்கலை தெரிவித்துள்ளார். திருச்சியில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்ட முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசுகையில், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு அதிக வலிகளை தந்த ஆண்டாக உள்ளது. மாநில அரசுடன் மத்திய அரசு என்றும் துணை நிற்கும். தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இழந்துள்ளோம். அவர் திரையில் மட்டும் கேப்டன் அல்ல. அரசியலிலும் கேப்டன் தான். தனது திரைப்படங்கள் வாயிலாக மக்களின் இதயங்களை வென்றவர் கேப்டன் விஜயகாந்த்.
விஜயகாந்த் எப்போதும் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுபவர். விஜயகாந்தை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், அவரின் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…