Tag: DMDK

”விஜய் எங்கள் வீட்டு பயன், தனித்து போட்டியிட தயார்” – பிரேமலதா விஜயகாந்த்.!

சென்னை : தேமுதிக கட்சியின் மண்டல பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து நிர்வாகிகள் செயல்பட வேண்டும். கிளைக்கழகம் வரை நேரடியாக களத்திற்கு சென்று அனைவரும் பணியாற்ற வேண்டும்” பிரேமலதா கூறியுள்ளார். மேலும்,  ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]

DMDK 4 Min Read
Premalatha Vijayakanth

கூட்டணிக்காக பாஜகவில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை‌: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!

சென்னை : தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, அரசியல் கட்சிகளிடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியிருக்கிறார். தேமுதிகவும் பாஜகவும் கடந்த தேர்தல்களில் கூட்டணியாக செயல்பட்டிருந்தாலும், தற்போது எந்த உத்தியோகபூர்வ அழைப்பும் இல்லை என பிரேமலதா தெளிவுபடுத்தியுள்ளார். பாஜகவுடனான கூட்டணி குறித்து ஊடகங்களில் எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்த […]

#BJP 5 Min Read
premalatha vijayakanth

ஜூன் 11-14 வரை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், ஜூன் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பார்கள். சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையும் கூட்டம் நடைபெறுகிறது. […]

DMDK 3 Min Read
DMDK District Secretaries Meeting

‘தேர்தலை ஒட்டியதே அரசியல்’.., ராஜ்யசபா சீட் வழங்காதது குறித்து பிரேமலதா சொன்ன கருத்து.!

சென்னை : தமிழ்நாட்டில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் மாநிலங்களவை பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ள நிலையில், ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை செந்தித்து பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி ,”அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அவை தலைவர் தனபால் போட்டியிடுவார்கள். தேமுதிக-வுக்கு 2026ல் […]

#DMK 4 Min Read
Premalatha Vijayakanth

மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் அறிவிப்பு.., தேமுதிகவுக்கு ’நோ’ சொல்லிய அதிமுக.!

சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். ராஜ்யசபா வேட்பாளர்களாக அக்கட்சியின் மூத்த தலைவர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு தனபால் போட்டியிடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இரண்டு இடங்களிலும் அதிமுகவே போட்டியிடுகிறது. தேமுதிகவிற்கு சீட் கொடுப்பது அதிமுகவின் கடமை என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில், சீட் கொடுக்கப்படவில்லை. அதே நேரம், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்று கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் 2025- […]

#ADMK 4 Min Read
eps premalatha

தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக முடிவு.? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.!

சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை திமுக ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 2 பேர் யார்? என்ற கேள்வி நிலவி வருகிறது. எம்பி சீட் கேட்டு நெருக்கடியால், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், மாநிலங்களவை சீட் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, நேற்றைய தினம் […]

#ADMK 3 Min Read
EPS - DMDK

மாநிலங்களவை சீட்? அதிமுகவின் முடிவிற்காக காத்திருக்கும் தேமுதிக..!

சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக 4, அதிமுக 2 இடங்களுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில்,  தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) மாநிலங்களவைத் தேர்தலில் சீட் ஒதுக்கீடு குறித்து அதிமுகவின் முடிவிற்காக பொறுமையாக காத்திருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “பொறுமை கடலினும் பெரிது” என்று கூறி, இது […]

#ADMK 4 Min Read
premalatha vijayakanth edappadi palanisamy

“பேன்ட் போட்ட முதல் அரசியல்வாதி நான் தான்!” விஜய பிரபாகரன் பேச்சு!

தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும், கட்சியின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனை நியமித்து பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். மேலும், கட்சியின் பொருளாளராக எல்.கே.சுதீஷ் என தேமுதிகவின் முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்து செயற்குழு கூட்டத்தில் அறிவித்தார் . மேலும், கடலூரில் […]

Dharmapuri 4 Min Read
Vijaya prabhakaran - DMDK

“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னதாகவே, கட்சியின் இளைஞரணி செயலாளராக மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் நியமனம் செய்யப்பட்டதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். அதனை தொடர்ந்து தேமுதிக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், தேமுதிக தலைவர் […]

Bharat Ratna 3 Min Read
Premalatha Vijayakanth

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!

தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர் பதவி எல்.கே.சுதீஷுக்கும், அவைத் தலைவராக வி.இளங்கோவனும், தலைமை நிலையச் செயலாளராக ப.பார்த்தசாரதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தருமபுரியின் பாலக்கோட்டில் நடைபெறும் நடைபெற்று வரும் அக்கட்சியின் 16-வது பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளின் ஒருமனதாக இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். கடலூரில் அடுத்த ஆண்டு 2026 ஜனவரி 9 […]

DMDK 3 Min Read
premalatha vijayakanth

விஜயகாந்த் தலைமுறைகளைக் கடந்தும் நினைவு கூரப்படுவார்! பிரதமர் மோடி பதிவு!

சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார். அந்த வீடியோவில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கும் பிரதமர் மோடிக்கும் இடையே இருக்கும் நட்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார். வீடியோவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் ” கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவருக்கு இடையில் […]

Desiya Murpokku Dravida Kazhagam 5 Min Read
vijayakanth and modi

“அதிமுக – பாஜக கூட்டணி குறித்து கருத்து இல்லை” – பிரேமலதா விஜயகாந்த்.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றைய தினம் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தினார். இதை தொடர்ந்து, அதிமுக – பாஜக கூட்டணியை திமுக, விசிக, தவெக என பல்வேறு கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக கூட்டணிகட்ட ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, எங்களிடம் யாரும் ஆலே ஆலோசிக்கவில்லை, நாங்களும் […]

#ADMK 3 Min Read
Premalatha - Vijayakanth

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சொன்ன பதில்?

சென்னை :  கடந்த (2024) ஆண்டு ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேமுதிக ஒரு ராஜ்யசபா சீட்டை அதிமுகவிடம் கோரி வருவதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருந்தது. தேமுதிக இந்தக் கோரிக்கையை அதிமுக தலைமை முழுமையாக ஏற்கவில்லை என்பதால் இரண்டு கட்சிகளுடைய கூட்டணியில் சலசலப்பு ஏற்படலாம் என்றும் தகவல்கள் பரவி […]

#ADMK 4 Min Read
premalatha vijayakanth edappadi palanisamy

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த மாதம் 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோதே தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டு என உடன்படிக்கை’ கையெழுத்தானதாக கூறியிருந்தார். தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக சொல்லவில்லை என குறிப்பிட்டு இபிஎஸ் பேசியிருந்தார். அதனை இப்பொது இபிஎஸ் மறுத்துள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று செய்தியாளர் சந்திப்பில் கடந்த மக்களவைத் தேர்தல் […]

#ADMK 4 Min Read
premalatha vijayakanth - eps

“தேர்தலில் வெற்றி பெற விஜய் ‘இதை’ செய்ய வேண்டும்” பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்!

மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். தற்போது தான் பெரும்பாலான தவெக மாவட்ட செயலாளர்கள் பதவிகளை நிரப்பி வருகிறார். இன்னும் சில மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் நியமனம், அடுத்து வட்டம், நகரம், ஒன்றிய பொறுப்புகள் என உட்கட்சியை பலப்படுத்தி வருகிறார். அதே நேரம், மாநாடு, புத்தக வெளியீடு நிகழ்ச்சியை தவிர்த்து அண்மையில் தான்  பரந்தூர் மக்களை நேரடியாக களத்திற்கு சென்று சந்தித்தார் தவெக தலைவர் […]

#Madurai 5 Min Read
TVK leader Vijay - DMDK Chief secretary Premalatha Vijayakanth

வரும் 7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும் 07.02.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெறவுள்ளது. வருகின்ற பிப்ரவரி 12 […]

Captain Vijayakanth 2 Min Read
DMDK

“பேரணி விவகாரத்தை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்” – அமைச்சர் சேகர்பாபு!

சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில், மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து, விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. இந்த அமைதி பேரணிக்கு காவல்துறை தரப்பில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறி அனுமதி கொடுக்க  மறுக்கப்பட்டதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். இருந்தாலும், தடைகள் மீறி நினைவிடம் வரை பேரணி […]

#Sekarbabu 4 Min Read
SekarBabu

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம்… பிரேமலதா கண்ணீர் மல்க அஞ்சலி!

சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்று வருகிறது.  விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் சேகர் பாபு, அண்ணாமலை, ஓபிஎஸ் உட்பட பலர் மரியாதை செலுத்தினர். மேலும், பிரேமலதா கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். முன்னதாக, போலீசார் தடையை மீறி […]

anniversary 3 Min Read
Vijayakanth -DMDK

தடையை மீறி பிரேமலதா தலைமையில் பேரணி… தொண்டர்களால் நிறைந்த கோயம்பேடு!

சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு அதிகாலை முதலே மரியாதை செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்த் நினைவு தினத்தை குரு பூஜையாக கடைப்பிடிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை கோயம்பேடு நினைவிடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு குரு பூஜை நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில், மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து, விஜயகாந்த் நினைவிடம் […]

anniversary 5 Min Read
Vijayakanth

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்! அமைதி பேரணி நடத்த அனுமதி மறுப்பு…

சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ‘விஜயகாந்த்’ மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது.  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில், அதிகாலை முதலே நீண்ட வரிசையில் கேப்டன் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு மரியாதை செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்த் நினைவு தினத்தை குரு பூஜையாக கடைப்பிடிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது. இவ்விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், விஜய் ஆகியோருக்கு […]

anniversary 3 Min Read
Captain Vijayakanth