சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன்பிறகு சிகிச்சை முடிந்த பின் வீடு திரும்பினார். இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று முதல்வரை சந்தித்து அவருடைய நலம் குறித்து கேட்டறிந்து வருகிறார்கள். அந்த வகையில், இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதல்வரை நேரில் சாதித்து நலம் விசாரித்தார். நலம் விசாரித்ததற்கான புகைப்படங்களும் உடனடியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் தொடங்கிவிட்டது. வைரலாக பரவியது […]
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், “கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் கால அவகாசம் தேவை. நிதானமாக யோசித்து, சரியான முடிவு எடுப்போம்,” என்று அவர் கூறினார். செய்தியாளர்கள் தொடர்ச்சியாக இது தொடர்பான கேள்விகளை கேட்டு வருவதால் பிரேமலதா இன்று சற்று கோபம் அடைந்தார். கோபத்துடன் பேசிய […]
சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக 4, அதிமுக 2 இடங்களுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) மாநிலங்களவைத் தேர்தலில் சீட் ஒதுக்கீடு குறித்து அதிமுகவின் முடிவிற்காக பொறுமையாக காத்திருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “பொறுமை கடலினும் பெரிது” என்று கூறி, இது […]
சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார். அந்த வீடியோவில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கும் பிரதமர் மோடிக்கும் இடையே இருக்கும் நட்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார். வீடியோவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் ” கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவருக்கு இடையில் […]
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும் 07.02.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெறவுள்ளது. வருகின்ற பிப்ரவரி 12 […]