அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.இதனை தொடர்ந்து,அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 14-ஆம் தேதியில் ஆண்டுதோறும் தலைமைச் செயலகம் தொடங்கி,அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘சமத்துவ நாள்’ ஆக கடைப்பிடித்து உறுதிமொழி ஏற்கவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில்,அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் படத்திற்கு தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து,அம்பேத்கரின் உருவப் படத்திற்கு அமைச்சர்கள் எ.வ.வேலு,பொன்முடி, மா.சுப்பிரமணியன்,சேகர்பாபு மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் முதல்வர் கலந்து கொண்டு “சமத்துவ நாள்” உறுதிமொழியை ஏற்றார்.
அதன்படி,சக மனிதர்களை சாதியின் பெயரில் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் எனவும்,மாறாக அவர்களிடம் சமத்துவதை கடைபிடிப்பேன் என்றும் முதல்வர் உறுதி மொழி ஏற்றுள்ளார்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…