தேமுதிக நினைத்தால் 3-வது அணி அமையும் – விஜயகாந்த் மகன் பேட்டி

தனித்து நிற்க தேமுதிகவுக்கு எந்த பயமும் இல்லை என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.இதனிடையே தேமுதிக கடந்த மக்களவை தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறது. ஆனால் வருகின்ற சட்டசபைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்வி எழுந்து வருகின்றது.இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில் , தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று கூறி வருகிறார்.
இந்நிலையில் மதுரையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தனித்து நிற்க தேமுதிகவுக்கு எந்த பயமும் இல்லை. தனித்து நின்று தேர்தலை சந்தித்து உள்ளோம். அரசியலில் நண்பனும் இல்லை எதிரியும் இல்லை; கண்டிப்பாக அரசியல் களம் மாறும்.தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணிஅமையும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025