நான் அறிக்கை நாயகன் என்றால், அவர் ஊழல் நாயகன் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

நான் அறிக்கை நாயகன் என்றால், முதல்வர் பழனிசாமி ஊழல் நாயகன் என மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய பின்னர் முக ஸ்டாலின் பேட்டி.
சென்னை கொளத்துரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய பின்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். அப்போது, ஆளும் கட்சியின் ஊழல் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டி பேசுவதுதான் எதிர்க்கட்சியின் வேலை என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான வழக்கில் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு திமுக எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
குடிமாமரத்து பணியில் அரசு சாதனை செய்யவில்லை. ஊழல் தான் செய்து வருகின்றனர். சாதிவாரியான புள்ளி விவரத்திற்கு ஆணையம் என்பது அரசியல் நாடகம் என்று கூறியுள்ளார். மேலும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என ரஜினி அரசியல் வருகை குறித்தும் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். ரஜினிகாந்த் கட்சி தொடங்கி கொள்கை அறிவித்தவுடன் பதில் கூறுகிறேன் என்றும் பேட்டியளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025