மக்கள் சக்தி முன்னால் இந்த சட்டங்களே தூளாகும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் கொரோனா பரவலால் காரணமாக கிராம சபை கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் இதற்கு முன்னர் வேளாண் சட்டங்களுக்கும் எதிராக, அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், தங்களது கிராமசபைக் கூட்டத்தில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, நேற்று சென்னை பூந்தமல்லி அருகே ஜமீன் கொரட்டூர் கிராமத்தில் தடையை மீறி கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் நடத்தினார்.கிராம மக்களிடம் சமூக இடைவெளியுடன் குறைகளை கேட்டறிந்தார்.இந்த கூட்டத்தில் 100 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்பப்பெறு என்ற வாசகம் அடங்கிய முக கவசம் அணிந்து இருந்தார்.மேலும் தடையை மீறி மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், ஸ்டாலின் அவர்கள் கொரோனா பரவல் ஏற்படும் சூழலை உருவாக்கியதாக அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானங்களுக்குப் பயந்து கிராம சபைக்குத் தடை விதித்தார்கள். கிராமங்களில் ‘மக்கள் சபை’யாகத் திரண்டது மக்கள் திரள்! #DMKwithFarmers என திரண்ட எங்கள் மீது வழக்காம். மண் காக்கும் போரில் வழக்குகள் தூசு; மக்கள் சக்தி முன்னால் இந்த சட்டங்களே தூளாகும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…