மதுரையில் ஷேர் ஆட்டோக்கள் போக்குவரத்து விதியை மீறி செயல்படுவதாகவும் தடுக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியது. அதில், ஷேர் ஆட்டோக்களில் 10 பேருக்கு மேல் பயணம் செய்து விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் தர முடியாது.
மேலும், தமிழகத்தில் தற்போது எத்தனை ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன..? விதிகளை மீறி செயல்பட்ட ஷேர் ஆட்டோக்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள என மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பின்னர், தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், மதுரையில் 2016 முதல் 2019 வரை 1,065 ஷேர் ஆட்டோக்களுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…