தமிழ்நாடு

12ம் வகுப்பு மாணவன் ஜீவா கொலை வழக்கில் மாறுவேடத்தில் சுற்றி திரிந்த குற்றவாளி கைது..!

Published by
லீனா

கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ஜீவா என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இவர் விருத்தாச்சலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். மேலும் அதே ஊரை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் ஆனந்த் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை ஜீவா பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்று ஆனந்த் அவரிடம் பேசிய போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த ஆனந்த் மாணவன் ஜீவாவை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு சென்ற போலீசார் ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த குற்றவாளி ஆனந்தை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

சென்னை, தாம்பரத்தில் மொட்டை அடித்து மாறுவேடத்தில் சுற்றித்திரிந்த ஆனந்தை போலீசார் கைது செய்தனர். ஓரினச்சேர்க்கை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தகவல்  தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

3 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

3 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

4 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

5 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

6 hours ago