Pondicherry University [file image]
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், தமிழகம் மட்டும்மின்றி புதுச்சேரியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாகூர், காலாப்பட்டு, தவளக்குப்பம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்கிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று நடைபெறவிருந்த புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும், ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வு தேதி குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொடர் மழை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு.!
இதற்கிடையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்றும், மீனவர்கள் தங்களது படகு, உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க புதுச்சேரி மீன்வளம், மீனவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…