நாமக்கல்லில் முட்டையின் விலை அதிகரிப்பு! எவ்வளவு தெரியுமா?

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் ஏற்பட்டதால் கோழி மற்றும் கோழி முட்டையில் இந்த வைரஸின் தாக்கம் உள்ளது என்று வதந்திகள் பரவியது. இதனால் விற்கப்படாமல் பல கோடிக்கணக்கான முட்டைகள்இருந்தன. இதன் காரணமாக நாமக்கல்லில் மிகவும் விலை குறைந்து 2 ரூபாய் வரைக்கும் முட்டை விலை நிர்ணயம் ஆனது.
இந்நிலையில், தற்பொழுது இந்த வதந்திகள் குறைந்து மக்கள் சாதாரணமாக அவற்றை உண்ண தொடங்கியுள்ளனர். இதனால் தற்பொழுது நாமக்கல்லில் முட்டையின் விலை 50 காசு உயர்ந்து தற்போது 2.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி குறைக்கப்பட்டு தேவை அதிகரிப்பதால் முட்டையின் விலை உயர்த்தப்பட்டது என ஒருங்கிணைப்பு குழு தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025