இது வரை அரசு ஊழியர்களுக்கு வழங்கி வந்த ஊதிய உயர்வு ரத்து செய்வதாக அரசு அதிரடி அறிவிப்பு…

தமிழ அரசு ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த முன் ஊதிய உயர்வு தற்போது ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசு ஊழியர்கள், ஒரு துறையில் பணியாற்றும்போது அந்த துறைக்கு தேவையான கல்வி தகுதியை விட கூடுதல் கல்வி தகுதி இருந்தால் இரண்டு முதல் மூன்று முன் ஊதிய உயர்வுகள் வரை வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகை மூலம், சிலர் அரசு துறையில் பணியில் சேர்ந்த பிறகு கூட உயர் படிப்புகளை படித்து கூடுதல் சம்பள உயர்வை பெற்று வந்தனர். இந்நிலையில், தமிழக அரசு இதுவரை வழங்கி வந்த கூடுதல் முன் ஊதிய உயர்வை ரத்து செய்வதாக நேற்று அதிரடியாக அறிவித்தது. இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழக அரசில் அனைத்து துறைகளிலும் அரசு ஊழியர்கள் உயர் கல்வி கற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முன் ஊதிய உயர்வு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார்.இதன்மூலம் அரசு பணியில் உள்ளவர்கள் கூடுதல் படிப்பை காரணம் காட்டி இனி கூடுதல் சம்பளம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி மற்றும் அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025