தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் தொடரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதத்தை விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்படும். எந்த மொழியையும் மாணவர்கள் மீது திணிக்க போவது இல்லை, அயல்நாட்டு மொழிகளையும் மாணவர்கள் படிக்க தேர்வு செய்யலாம். மூன்றாவது மொழி என்ன என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம். 5 -ஆம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வியில் கற்பிக்கும் முறை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தமிழக முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும், தமிழக அரசு மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இது குறித்து தற்போது அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும் புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக அரசு குழு அமைத்து அதற்கான ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கூடுதலாக மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் அரசு பள்ளியில் உள்ளனர் என்று கூறினார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…