11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? அரசுப் பள்ளிகளில் 1. 31 லட்சம் குழந்தைகள்.. அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்தாலே பேருந்தில் இலவசமாக பயணிக்க அறிவுறுத்தல் என அமைச்சர் பேட்டி.

தமிழ்நாட்டில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை வரவேற்ற பிறகு சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகளுக்கு வந்துள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு கல்வியாண்டிலும் சிறப்பாக படித்தது போல், இந்த ஆண்டும் பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் படிக்க வேண்டும் என்றார். அரசுப்பள்ளிகளில் 100% தேர்ச்சி கொடுக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். தமிழகத்தில் 8,340 நடுநிலைப் பள்ளிகள், 3,547 உயர்நிலை மற்றும் 4221 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 16,108 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று 46,22,324 மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரவுள்ளனர்.

மேலும், அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 1. 31 லட்சம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர்.  6-12ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்தாலே பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய பேருந்து பயண அட்டை எப்போது வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறையுடன் ஆலோசித்து தெரிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பள்ளி பொதுத்தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை, 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து தொடர்பாக மாநில கல்விக்கொள்கையில் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நீக்குவது குறித்து எந்த ஒரு ஆலோசனையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

உயர்கல்வி துறைக்கென தனி பாடம் கோட்னு வருவது குறித்து வரும் 15-ஆம் தேதி நாடாகும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். மாநில கல்வி கொள்கை குறித்து முழு அறிக்கை அளித்த பின் முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும், கோடை காலத்தையொட்டி வகுப்பறையில் நீர் இருப்பதை உறுதிப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

மேலும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு போட்டி தேர்வு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போரை தேர்வு இல்லாமல் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆசிரியர் பணியிடம் காலியாக இருக்க கூடாது என தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

28 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

59 minutes ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

4 hours ago