மகளிருக்கான இலவச சேவையால் பேருந்துகள் குறைப்பு.? மாவட்ட ஆட்சியர் பேசியதாக வெளியான பரபரப்பு தகவல்.!

மகளிருக்கான இலவச சேவையால் பேருந்துகள் குறைக்கப்பட்டதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கூறியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதி வாடியூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் மே 1ஆம் தேதி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்களின் கோரிக்கைளை கூறினர். அப்போது குறிப்பிட்ட ஊராட்சி பகுதியில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருப்பதாக கோரிக்கை எழுந்தது.
அதற்கு பதில் அளித்த தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன், சில பகுதிகளில் தற்காலிகமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மகளிருக்கு இலவச சேவை உள்ளிட்ட காரணங்களால் வருவாய் குறைவு போன்ற காரணங்களாலும், தற்சார்பு வகையில் ஓடும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் சரி செய்யப்பட்டு, பேருந்து சேவை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பேசியிருந்தார்.
சில காரணங்களால் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பது விரைவில் சரிசெய்யப்படும் என தான் கூறினேன். மகளிருக்கு இலவச சேவை வழங்கியதால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக நான் கூறவில்லை என தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் செய்தி நிறுவனங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.