தூய்மையான காற்றை சுவாசிப்பது போல் உள்ளது-ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம்..!

- ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழி அனைவருக்கும் ஆரோக்கியமான வழி என்று ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது திமுக. திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவி ஏற்று ஒரு மாதம் நிறைவடைந்ததை அடுத்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று முதலமைச்சருக்கு தெரிவித்துள்ளார். அதில் அவர், “பல்வேறு பதவிகளில் திறமை வாய்ந்த அதிகாரிகளை நியமித்து வரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழி அனைவருக்கும் ஆரோக்கியமான வழி. இது புதிய தூய்மையான காற்றை சுவாதிப்பது போல் உள்ளது. தங்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
The way #CMMKStalin is going about in appointing people of caliber in various positions is a very healthy trend.
Atlast a breath of fresh air.
Thank u sir .— pcsreeramISC (@pcsreeram) June 7, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025