ஜெயலலிதா நினைவு இல்லம்..! ஆட்சியர் ஆய்வு..!

முன்னாள் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரின் மறைவை தொடர்ந்து ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். பின்னர், நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.
வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது தொடர்பாக அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக ஆட்சியர் சீதாலக்ஷ்மி நேரில் ஆய்வு செய்து வருகிறார். அவருடன் வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!
May 5, 2025