குடும்பத்துடன் கழுத்தறுத்து தற்கொலை செய்துகொண்ட நகைக்கடை வியாபாரி.! கடிதத்தில் சிக்கிய திடுக்கிடும் தகவல்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • திருச்சியில் மகாராஜ் என்ற விடுதியில் குடும்பத்துடன் அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் நேற்றிரவு அவர்கள் குடும்பத்துடன் கழுத்தறுத்து தற்கொலை.
  • அந்த அறையில் கடிதத்தில், மன வளர்ச்சி குன்றிய தனது மூத்த மகன் நிகிலை சரியாக கவனிக்கை முடியாததாலும், கடன் தொல்லை காரணமாகவும் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டிருந்தது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊரணி பகுதியில் செல்வராஜ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு செல்லம் என்ற மனைவியும் நிகில், முகில் என இரண்டு மகன்கள் இருந்தனர்.  இவர்கள் சமீபத்தில் திருச்சியில் உள்ள மகாராஜ் என்ற விடுதியில் குடும்பத்துடன் அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் நேற்றிரவு அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதாக உறவினர் குரு கணேஷுக்கு, செல்வராஜ் என்பவர் செல்போனில் தகவல் அனுப்பியுள்ளார்.

பின்னர் இதனை பார்த்து அதிர்ந்த குரு கணேஷ், அவசர அவசரமாக அந்த விடுதிக்கு சென்றார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் செல்வராஜ் தங்கியிருந்த அறையின் கதவை திறந்து பார்த்த போது செல்லம், நிகில் மற்றும் முகில் ஆகியோர் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து சடலமாக கிடந்தனர். இதனிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில், இருந்த செல்வராஜை தகவலறிந்து வந்த போலீசார் மீட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்பு அறையை சோதனை செய்ததில் செல்வராஜ் எழுதிய கடிதம் கிடைத்தது.

இந்நிலையில், அந்த கடிதத்தில் மன வளர்ச்சி குன்றிய தனது மூத்த மகன் நிகிலை சரியாக கவனிக்கை முடியாததாலும், கடன் தொல்லை காரணமாகவும் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டிருந்தது. அதனை பார்த்த போலீசார், மனைவி, மகன்களை செல்வராஜ்தான் கழுத்தறுத்து இருப்பார் என்பதால் மூவர் உயிரிழப்பையும் கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

13 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

13 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

13 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

15 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago