தந்தை-மகன் கொலை வழக்கில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது சாத்தான்குளம் போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர் என சிபிஐ மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உட்பட 10 போலீசாரை கைது செய்தனர்.
இந்நிலையில் ஆய்வாளர் ஸ்ரீதர், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சிபிஐ தரப்பில் வாதங்கள் நடந்தது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியாமல் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிஸ் மீது பொய் வழக்கு பதியப்பட்டிருக்காது என தெரிவித்தனர்.
மேலும், பொறுப்பு அதிகாரி என்கிற வகையில் ஸ்ரீதருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது எனவும், இதன்காரணமாக அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என உரையாடினார்கள். மேலும், இந்த ஜாமீன் மனு மீதான வழக்கை வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…