விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களை ஒரே இடத்தில் தகனம்.!

கள்ளக்குறிச்சி : விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களை ஒரே இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஷச்சாராய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை கவனிக்க வட்டாட்சியர்கள், தனி வட்டாட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கருணாபுரத்தைச் சேர்ந்த 29 பேரின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்பொழுது, எரியூட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கருணாபுரம் ஆற்றங்கரையோரம் சடலங்களை எரியூட்ட அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் வருகை தந்துள்ளனர்.
இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவிட்டு அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த, நிவாரண தொகைக்கான காசோலையையும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025