தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு , தமிழக அரசியல் கட்சிகள் தங்களது பல கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.திமுக மக்கள் கிராம சபை என்று பிரச்சார மேடையை ஆரம்பிக்க .தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்திலிருந்து அதிமுகவின் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் ஹாசன் ஊழல் ,திராவிடம்,எம்.ஜி.ஆர் என்று தனது பிரச்சார போக்கை சற்று வித்தியாசமாக கொண்டு செல்கிறார் .தனது பிரச்சாரத்தில் ஒரு படி மேலே சென்று ” புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும் ” என்று ட்விட்டரில் பதிவிட இது சற்று அதிமுகவினரை கோபமடைய வைத்துள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கமல்ஹாசன் அரசியல்வாதி கிடையாது. ஓய்வு நேரத்தில் பொழுது போகாமல், அரசியலுக்கு வந்திருக்கிறார். எம்ஜிஆரை பிறர் ரசிக்கலாம்; ஆனால் அவரை சொந்தம் கொண்டாட அதிமுகவுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்று கூறினார்.
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…