Sasikala: சசிகலா – இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடிவாரண்ட்!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் லஞ்சம் கொடுத்த புகாரில் சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகளை பெற லஞ்சம் கொடுத்ததாக சசிகலா, இளவரசி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது சொகுசு வசதிகளுக்காக சசிகலா மற்றும் இளவரசி லஞ்சம் கொடுத்ததாக வழக்கு பதியப்பட்டது. இவ்வழக்கு விசாரணை நடைபெறும் கர்நாடகா லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடி வாரண்ட் பிறபித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, சசிகலா, இளவரசி இருவரையும் கைது செய்து அக்.5ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பெங்களூரு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும், இருவருக்காகவும் ஜாமின் கையெழுத்திட்ட நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு அக்.5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.