தமிழகத்தில் இம்மாத இறுதியுடன் தென்மேற்கு பருவமழை முடிவடையுள்ள நிலையில் அங்கு கடல் பகுதியில் புதிய காற்றழுத்து தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என கூறப்படுகிறது.
வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும் இதனால் வரும் 8ஆம் தேதி வரையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் குமரி கடல் பகுதியில் காற்றின் வேகமானது 45 முதல் 55 கிலோமீட்டர் வரையில் காற்று வீசக்கூடும் என்பதால் இன்னும் நான்கு நாட்களுக்கு அங்குள்ள மீனவர்கள் குறிப்பாக, குளச்சல், குட்டம் பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளனர்.
