காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை! நாகர்கோயில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

கன்னியாகுமாரி பகுதியில் புறம்போக்கு நிலத்தை மீட்கும் பணியில் ஈடுப்பட்ட அரசு அதிகாரிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கிள்ளியூர் தொகுதி காங். எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Nagercoil Court - Killiyur MLA Rajesh Kumar

நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு நிலத்தை அரசு அதிகாரிகள் மீட்க சென்றபோது ஏற்பட்ட தகராறில் அரசு அதிகாரிகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில், தற்போதைய கன்னியகுமாரி கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும், தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவருமான ராஜேஷ்குமார் உட்பட 6 பேர் மீது அப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் உட்பட 3 பேருக்கு 3 மாத காலம் சிறை தண்டனையும் ரூ.100 அபராதமும் விதிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்