“HIV தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!
HIV தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

சென்னை : 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,”இந்தியாவில் முதன்மையான மருத்துவ கட்டமைப்பை பெற்றுள்ளது தமிழ்நாடு.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தால் 52 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்திற்கு ஐ.நா விருது கிடைத்துள்ளது” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள 7,618 எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுடன் வசிக்கும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி & மருத்துவ தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ.1000 நிதி உதவி வழங்கப்படும்” என்றார்.
பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை பற்றி விவரிக்கையில், ”6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2025ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8.53 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. மாநில மகப்பேறு செவிலியர் பயிற்சி நிறுவனம், தேசிய பயிற்சி நிறுவனமாக தரம் உயர்த்தப்படும். அரசு மருத்துவமனைகளில் 25 புதிய போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை திட்டம் விரைவில் மதுரையில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சிதலமடைந்த 1,823 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.147.00 கோடியில் பல்நோக்கு உயர்சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்படும்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரூ.125 கோடி மதிப்பில் உயர் சிறப்புச்சிகிச்சைக்கு புதிய கட்டடம் கட்டப்படும். மகப்பேறு பிரிவில் மகத்தான சாதனைகளை செய்து வருகிறது தி.மு.க அரசு. தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் 7.8 ஆக குறைந்துள்ளது.” என என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025