கோயம்புத்தூர் இடையார்பட்டி ஊரில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் பெயிண்ட்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஷாலினி என்ற பெண்ணை காதலித்து சென்றாண்டு திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்க்கு பின்னர் ராஜேந்திரன் சரிவர வேலைக்கு போகவில்லை என தெரிகிறது.
ஷாலினி கர்ப்பமாக இருந்துள்ளார். ராஜேந்திரனுக்கும் ஷாலினிக்கும் பிரச்சனை வர ஷாலினி தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து ராஜேந்திரன் ஷாலினியை அழைத்து வர அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஷாலினி அம்மாவான மீனாவிற்கும், ராஜேந்திரனுக்கும் சண்டை வர அப்போது ராஜேந்திரன் தனது மாமியார் மீனாவை தாக்கியதாக கூர்பாடுகிறது.
இதனை அறிந்து கோபமடைந்த ஷாலினியின் தந்தை தங்கமணி குமார், தனது மருமகன் ராஜேந்திரனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இந்த காட்சி அருகில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியது. இந்த சம்பவத்தை அடுத்து, ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜேந்திரனை கோவை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
மேலும், ஷாலினிக்கு மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த கொலை சம்பந்தமாக போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ராஜேந்திரனை கொலை செய்த தங்கமணி குமார் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…