நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குமரி ஆனந்தன் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.மேலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட குமரி ஆனந்தன் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 30ம் தேதி கோவையில் நடைபெறும் . தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்க உள்ளோம்.நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குமரி ஆனந்தன் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…