#BREAKING: சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வழக்குப்பதிவு..!

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரத்தில் அமைச்சர் வாக்கு சேகரிக்கும்போது ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு தலா ரூ.100 கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025