Vijay [File Image]
சென்னை : நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய், தொகுதி வாரியாக’தளபதி விஜய் கல்வி விருது’ வழங்கும் விழாவில் ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.
இந்த விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்துகொண்டபோது மேடையில் பேசிய த.வெ.க தலைவர் விஜய் மாணவர்களுக்கு அட்வைஸ் ஒன்றையும் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “நிறைய சோசியல் மீடியா சேனல்கள் நல்லது கேட்டது என்று கருத்து கேட்பார்கள். அதில் எல்லாம் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ரொம்பவே சுலபமாக நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும், நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் காட்டுவார்கள்.
இதனை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் நீங்கள் எல்லாமே பாருங்கள், எல்லாமே படிங்கள் ஆனால், உண்மை எது பொய் எது என்பதை எப்படி தெரிந்துகொள்வது என்பதை கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் நம்மளுடைய நாட்டில் என்ன பிரச்சனை, நம்மளுடைய நாட்டின் மக்களுக்கு என்ன பிரச்சனை என சமூகத்தின் தீமைகள் பற்றி தெரியவரும்.
அது தெரிந்துகொண்டால் ஒரு சில அரசியல் கட்சிகள் செய்யும் பொய்யான பிரச்சாரங்களை நம்பாமல் எது சரி..எது தப்பு என்பதை சரியாக தெரிந்து கொண்டு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க கூடிய, ஒரு விசாலமான பார்வையை வளர்த்துக்கொள்ள முடியும். அது மட்டும் வந்துவிட்டது என்றாலே, அதைவிட சிறந்த அரசியல் வேறு எதுவுமே இருக்க முடியாது. அதைவிட நம்மளுடைய நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் செய்யப்போற இந்த பங்களிப்பு வேறு எதுவுமே இருக்க முடியாது” எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…