‘பாரத் பந்த்’ முழு வெற்றியடைய செய்வோம்” -திமுக கூட்டணி கட்சிகள் அழைப்பு

வருகின்ற 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் , திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இவர்களின் போராட்டம் தொடர்ந்து 11-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.விவசாயிகளின் போராட்டத்திற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.ஆனால் பேச்சுவார்த்தைக்கு 9-ஆம் தேதி அழைப்பு மத்திய அரசு விடுத்த நிலையில் ,வருகின்ற 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் ‘பாரத் பந்த்’ முழு வெற்றியடைய செய்வோம்” என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,”வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி டிசம்பர் 8-ஆம் தேதி ,இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ள நாடு தழுவிய ‘பாரத் பந்த்’ முழு வெற்றியடைய செய்வோம் “.தமிழக விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள் தொழிற்சங்கங்கள் ,அரசு அலுவலர் சங்கங்கள்,சமூக நல அமைப்புகள்,பொதுமக்களுக்கு நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து கட்சித் தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
“இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு 08-12-2020 அன்று நடத்தும் ‘பாரத் பந்த்’ முழு வெற்றியடைய செய்வோம்”
– அனைத்துக்கட்சித் தலைவர்கள் அழைப்பு.#SpeakUpForFarmers#DMKwithFarmers pic.twitter.com/gU1hkXMZEF
— DMK (@arivalayam) December 6, 2020