LIVE : உருவாகும் ‘ஃபெங்கல்’ புயல் முதல் …நாடாளுமன்ற அவை ஒத்திவைப்பு வரை!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி முதல் மகாராஷ்டிரா புதிய முதலமைச்சர் யார் என்பது வரை இன்றைய முக்கிய செய்திகள் கிழே கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சில மணி நேரங்களில் புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதில் கரையைக் கடக்கும் இடம் மாறலாம் என கூறப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் வரும் டிச-2ம் தேதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி, மணிப்பூர் விவகாரம் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளியால் இந்த ஒரு வாரமாக நடைபெறவேண்டிய இந்த கூட்டத் தொடர் முடங்கியுள்ளது.