உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நாளை அமையப்போகும் நல்லாட்சிக்கான முன்னோட்டம் -ஸ்டாலின்

Published by
Venu
  • மக்களின் நம்பிக்கைக்குரிய இயக்கம் திமுக தான் என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நாளை அமையப்போகும் நல்லாட்சிக்கான முன்னோட்டம் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி மடல் எழுதியுள்ளார்.அவரது மடலில்,  மக்களின் நம்பிக்கைக்குரிய பேரியக்கம் எந்நாளும் தி.மு.கழகமே என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்துள்ளது, ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள். தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஜனநாயகத்தின் வேர்கள் காய்ந்துவிடக் கூடாது என்பதனால், உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்துங்கள், முறையாக நடத்துங்கள் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தியது.

உள்ளாட்சியில் இன்று மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, நாளை தமிழகத்தில் அமையப்போகும் நல்லாட்சிக்கான முன்னோட்டம். மக்கள் தீர்ப்பினால் அதிர்ச்சியடைந்துள்ள ஆளுந்தரப்பு மாநகராட்சி-நகராட்சி-பேரூராட்சி தேர்தல்களை நடத்துவதில் என்னென்ன தகிடுதத்தங்களை நடத்தப்போகிறது, எப்படியெல்லாம் தாமதப்படுத்தப் போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எத்தனை மோசடிகள் செய்தாலும், மக்களை ஏமாற்ற முடியாது. தி.மு.கழகத்தின் வெற்றியைத் தடுத்திட முடியாது என்பதை ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்திவிட்டன என்று தெரிவித்துள்ளார்.

 

Published by
Venu

Recent Posts

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

1 hour ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

3 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

4 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

6 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

6 hours ago